நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது.

பல்வேறு கோலங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்து ஊர்களிலும் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டது.

விழா நிறைவாக விநாயகர் சிலைகள் அனைத்தும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்புக்கு கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அம்மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி.யுமான சடேஜ் பாடீல், உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியில் உள்துறை இணை அமைச்சராக இருந்த போது இந்த கன்வேயர் பெல்ட்டுகளை ஏற்பாடு செய்துள்ளார்.

விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் லக்கேஜுகளை நகர்த்த பயன்படுத்தப்படும் இந்த கன்வேயர் பெல்ட்டுகள் முதல்முறையாக விநாயகர் சிலைகளை நீர்நிலையில் கரைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.