லண்டன்
இனி மாணவர் விளைவில் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் குடி புகுவது அதிகமாகி வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக புதிய விசா கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் புதிய விசா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் எனவும், இதன் மூலம் இங்கிலாந்துக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என அந்நாடு அரசு அறிவித்துள்ளது. பலர் மாணவர் விசாவை பயன்படுத்தி இங்கிலாந்தில் வேறு பணிகளுக்காக நுழைவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த விதியில் இருந்து முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.