சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனிமேல் ஆன்லைன் தேர்வு கிடையாது, செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், ஆன்லைன் தேர்வுதான் நடத்த வேண்டும் என்று போராடிவ ரும் நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆன்லைன் தேர்வு நடத்தப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, ஆன்லைமூன் பள்ளி, கல்லூரிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆன்லைன்மூலமே தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் ஆன்லைன் கல்வியும் தொடர்கிறது.
இந்த நிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது எழுத்து தேர்வு மூலம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செமஸ்டர் தேர்வுகள் 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கு இனிமேல் ஆன்லைன் தேர்வு நடைபெறாது, எழுத்து தேர்வு மட்டுமே நடைபெறும் என்றும், டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும், இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த நிலையில், அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்து cள்ளது. பொறியியல்,கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.