ராஞ்சி: ஜார்கண்ட் முதலமைச்சராக  ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் நேரில்  வாழ்த்து தெரிவித்தனர்.

81 உறுப்பினர்களைக் கொண்டு ஜார்கண்ட் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தலானது நடைபெற்றது. இதில், 56 இடங்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஹேமந்த் சோதனை பதவி ஏற்க மாநில கவர்னர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, இன்று மாலை  ஜார்கண்டின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதிவியேற்றுள்ளார். அதில், இவர் 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

ராஞ்சியில் இன்று மாலை 4மணி அளவில்  நடைபெற்ற இ பதவியேற்பு விழாவில், ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கேங்வார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, சிபுசோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானேர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குறிப்பாக தமிழக துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினர்.