சென்னை: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மலையாள திரையுலகின் பாலியல் சர்ச்சைகள் குறித்து, கேரள மாநிலம்   கொச்சியிலும், திருவனந்தபுரத்திலும்  என இதுவரை 6 வழக்குகள்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இது திரையுலக பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள நடிகர், நடிகைகளுக்கு பெரும் புகழை சம்பாதித்து தருவது திரையுலக்ம். ஆனால், அந்த புகழுக்கு இடையில் பல்வேறு அத்துமீறில்களும் அரங்கேறி வருகின்றன. புகழுக்கா ஏக்கும் நடிகைகள் பலர் பலரது காம ஆசைகளுக்கு பலியாகி சீரழிந்து வருகின்றனர்.  ஏராளமான பாலியல் சம்பவங்களும் திரைமறைவில்  நடைபெற்று வருகின்றன. இதை அட்ஜஸ்ட்மென்ட் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், பல நடிகைகள் திட்டமிட்டே பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பல திரையுலக பிரமுகர்களின் காம ஆசைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான புகார்கள் அவ்வப்போது வெளியே வந்தாலும்,  நடிகைகளின் எதிர்காலம் கருதி அவை உடனே சமரசம் செய்யப்பட்டுவிடும்.

இந்த நிலையில், கேரள மாநில திரையுலகில் நடைபெற்று வந்த பாலியல் சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு, மூத்த நடிகை சாரதா தலைமையில் ஹேமா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. அந்த கமிட்டியின் அறிக்கை கடந்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பாலியல் சம்பவங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி மலையாள திரையுலகத்தையே புரட்டிப்போட்டுள்ளது.

நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உள்பட பல நிர்வாகிகள் பதவி விலகிய நிலையில்,  நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. இதில் 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்குபாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரு இளம் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு கிடப்பில் போட்டுள்ளதாக  குற்றம் சாட்டி உள்ளதுடன், இந்த அறக்கையை மக்கள் மன்றத்தில் வெளியிடாமல் வைத்திருப்பது மற்றும் தனியுரிமை மீறிய செயல் என்றும், இதன்மீது   சட்ட நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தது என்று தெரிவித்துள்ளதுடன், ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் இருந்தால் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

ஏற்கனவே ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி மனுத்தாகக்ல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹேமா கமிஷனின் அறிக்கை மலையாள திரையுலகில்  சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகைகள் தங்களது ஆதங்களை தெரிவித்து வருகின்றனர்.