கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காருபவர்களுக்கும் கட்டாய ஹெல்மெட்! டிச.1 முதல் அமல்

Must read

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 4 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு கூறி இருந்தது.

அதை எதிர்த்து கேரள அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்திடம் முறையிட்டது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, மத்திய அரசின் உத்தரவை ஏற்று அதன்படி அமல்படுத்த போவதாக நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்தது.

இதையடுத்து வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். இந்த சட்டம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், புள்ளிவிவரங்களின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமருபவர்கள் தலைக்கவசம் அணியாததால் காயம்படுவது தெரிவிக்கப் பட்டுள்ளது. 2018ம் ஆண்டு 3,721 பேர் இவ்வாறு காயம் அடைந்தனர்.

தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது பற்றிய உத்தரவுகள் போக்குவரத்து போலீசாருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் கேரள அரசு அனுப்பி வைத்து இருக்கிறது.

 

 

More articles

Latest article