சென்னை

சென்னை போரூர் சங்கச்சாவடியில் தவெக தொண்டர்களால் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..

பிரபல நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கியதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது  இம்மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நேற்று நடந்த 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அறிவித்தார், அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் த.வெ.க. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலமுருகனுக்கு த.வெ.க. நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் . மேலும் மாவட்ட செயலாளர் பாலமுருகனுக்கு ஜேசிபி கொண்டு மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். ,தாம்பரம் பைபாஸ் சாலை போரூர் சுங்கச்சாவடியில் த.வெ.க. நிர்வாகிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

குறிப்பாக போரூர் சுங்கச்சாவடி அருகே த.வெ.க.வினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது .  போக்குவரத்து காவல்துறையினர் அங்கு உடனடியாக விரைந்து  த.வெ.க. நிர்வாகிகளை அப்புறப்படுத்தி நெரிசலை சரி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .