சென்னை
சென்னை கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாகச் சொந்த ஊர் புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் நேற்று இரவு முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
எனவே கோயம்பேடு பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இன்று காலையும் கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.
கோயம்பேட்டில் மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பெருங்களத்தூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், சொந்த ஊர் செல்வோர் உள்ளிட்ட பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.