
சென்னை,
தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பழை பெய்தது.
இந்நிலையில், இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் பிற்பகலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மழை காரணமாக பள்ளி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். வேலைக்கு சென்றவர்களும் வீடு திரும்ப மிகவும் சிரமப்பட்டனர். பல இடங்களில் ரோட்டில் தேங்கிய தண்ணீர் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (வியாழக் கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்று குறித்து சென்னை வானிலைஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறினர்.
தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஒரு வாரம் வரை மழை நீடிக்கும்.இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]