நாகர்கோவில்,

ங்கக்கடலில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் புயலின் தாக்கத்தின் காரணமாக சூறாவளி காற்றும், பேய் மழையும் கொட்டியது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள் , ஆறுகள் நிறைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு உடைந்து தண்ணீர் பாய்ந்தோடு கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி  மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 4000க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

அதேபோல சுசீந்திரம் பாலமும் வெள்ளத்தால், மூழ்கியது.அந்த பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனால் சுசீந்திரம் பகுதியில் ஓடும் பழையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், வள்ளியூர் அருகே உள்ள   மகேந்திரகிரி மலையில் பெய்த கன மழையால், அருகாமை யில் உள்ள பனகுடி ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல இடங்களில் வெள்ளம் காரணமாக தரைப்பாலமும் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.