சென்னை: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக,  சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை ஒருநாள் (15ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை அமைச்சர்கள் அதிகாரிளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்களை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன், சென்னை உள்பட அதிகனமழை பெய்யும் மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கவும், தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தினார். சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளைக்கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் நொளை சென்னை  , திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், கன மழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் அறிவுரைகள் வழங்கினார்.

அதன்படி,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வட கிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

, 15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும்,

தனியார் ஐ.டி. நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும்,

15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும்

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.