விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு  செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை வனத்துறை திரும்ப பெற்றுள்ளது.

கடந்த மாதம் (நவம்பர்) கனமழையை காரணம் காட்டி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக, இந்த மாதமும் (டிசம்பர்) கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கையால் வனத்துறை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு  மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மலைக்காலங்களில் மழை பொழிவு மற்றும் மலைப்பகுதியில் செல்லும் நீரோடையில் செல்லும் தண்ணீரின் வேகத்தை பொருத்தே அனுமதி வழங்கப்படும்.

தற்போது  வடகிழக்கு பருவழை காரணாக  மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வனப்பகுதிகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் கனழை கொட்டி வருகிறது. இதனால், சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.