தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

Must read

சென்னை: 
மிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.இன்று பகல் முதல் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article