நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அவலாஞ்சியில் 18 செ.மீ அளவுக்கு மழை கொட்டி உள்ளது.
இதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. வால்பாறையில் 14 செ.மீ, மேல்பவானியில் 11 செ.மீ., தேவலாவில் 8 செ.மீ., நடுவட்டத்தில் 6 செ.மீ., தென்காசி மற்றும் மாமல்லபுரத்தில் 3 செ.மீ., காஞ்சிபுரம் மற்றும் கேளம்பாக்கத்தில் தலா 2 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.