விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனத்த மழை பெய்து வருவதால், சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கோவில் நடை திறந்ருக்கும் அப்போது ஒருசில நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் அனுமதி வழங்கி வருகிறது.
இந்த நிலையில், ஆவணி மாத பவுர்ணமி வரும் திங்கட்கிழமை வர இருப்பதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல ஆவலாக இருந்து வந்தனர். ஆனால், மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மலைக்கோவி லுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதாவJ, சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளனர். எனவே பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.