சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது.
சென்னையின் முக்கிய பகுதிகளான ராமாபுரம், போரூர், கிண்டி, தி.நகர், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.