கந்து வட்டி: சின்னத்திரை நடிகை அனந்தி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Must read

சென்னை,

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள  காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை ஆனந்தி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், தனது  மருத்துவ செலவுக்காக  வாங்கிய ரூ. 5 லட்சத்திற்கு பதிலாக  ரூ. 32 லட்சம் கந்துவட்டி கேட்பதாகவும், தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் தனது  உறவினர் மீது நடிகை ஆனந்தி புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்நிலையத்தில்   புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என  நடிகை ஆனந்தி கூறி உள்ளார்.

More articles

Latest article