புதுடெ ல்லி :

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பநிலை உயர்வின் காரணமாக, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களின் பல பகுதிகளில், வெப்பநிலை, 45 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கு, உஷார் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் குல்தீப் ஸ்ரீவத்ஸவா நேற்று கூறியதாவது: நாட்டின் வடக்கு பகுதியில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் டில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டில்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் – மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில், அடுத்த ஐந்து நாட்களுக்கு, வெப்பம் அதிகமாக இருப்பதுடன், வெப்பக் காற்று வீசும்.சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மத்திய மஹாராஷ்டிரா, கடலோர ஆந்திரா, ஏனம், ராயலசீமா மற்றும் வடக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில், கடும் வெப்பக் காற்று வீசக் கூடும். சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்துக்கு இடையே, வட- மேற்காக வறண்ட காற்று வீசுவதால், இப்பகுதிகளில் கடும் வெப்பக் காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளது.வெப்பத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால், பகல் 1 முதல், மாலை 5 மணி வரை, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

[youtube-feed feed=1]