ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
90’களின் இறுதியில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும் டிஜிட்டல் யுகத்தில் கூட செய்தி உண்மைதானா என்று சரிபார்க்காமல் வெளியிடுவது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று ஹீத் ஸ்ட்ரீக் கூறியுள்ளார்.
இடைத்தரகர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் 2021ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel