சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது கடும் வெயில் அடித்தாலும், அவ்வப்போது பெய்த கோடை மழையால் சற்று வெப்பம் தணிந்தது. மே இறுதியில் தென் மேற்கு பருவமழை கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியதால்ல் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு எதுவும் இல்லாமல், மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதாவது, 3 டிகிரி பாரன்ஹீட் முதல் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவித்துள்ளது.

அதே வேளையில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றாலும், தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.