குடகு:
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில், சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் நெஞ்சு வலியால் குடகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையிலுள்ள தன் நண்பரின் ‘பாலிபெட்டா’ எஸ்டேட்டுக்கு இன்று மதியம் வந்தார். எஸ்டேட்டில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக, அவர் விராஜ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு மணி நேர ஓய்வுக்கு பின் உயர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]