சென்னை:
குட்கா வழக்கில் தொடர்புடைய தமிழக சுகதாரத்துறை அ அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தடை செய்யப்பட்ட குட்கோ போன்ற போதைப்பொருட்களை தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்ய ரு.40 கோடி அளவில் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தமிழக காவல்துறை டிஜிபி, முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட சுகாதாரத்துறை, காவல் துறை அதிகார்கள் மீது புகார் கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை இன்று உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய்பாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், குட்கா ஊழலை மூடி மறைக்கும் அரசின் முயற்ச்சியை உச்சநீதிமன்றம் முறியடித்துவிட்டதாகவும் கூறினார். குட்கா ஊழல் விசாரணையை சிபிஐ.க்கு அதிமுக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.