சென்னை: 
புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2021 ஆம் ஆண்டில் சேர்க்கைக்காக 1,450 எம்பிபிஎஸ் இடங்களுடன் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தமிழ்நாடு சேர்க்கும் என்றும், இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 (ESIC மருத்துவக் கல்லூரி உட்பட) மற்றும் இடங்களின் எண்ணிக்கை – 5,120 இடம் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.