சென்னை

டிக்டாக் செயலி தரவிறக்கம் செய்ய விதித்துள்ள தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விலக்கி உள்ளது.

தனி நபர்களின் ஆட்டம் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த டிக்டாக் செயலி மிகவும் உதவியாக இருந்தது. அதே நேரத்தில் அதில் பதியப்பட்ட பல வீடியோக்கள் ஆபாசமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த செயலியில் பல இளைஞர்களும் இளைஞிகளும் அரைகுறை ஆடையுடன் ஆபாச சைகைகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை பதிந்ததாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு பதியபடது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இந்த செயலியில் ஆட்சேபகரமான வீடியோக்கள் அதிக அளவில் உள்ளதாகவும் அதை தடுக்க செயலியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததையும் சுட்டிக் காட்டியது. அதனால் இந்த செயலியை முழுவதுமாக தடை செய்ய மத்திய அரசை கேட்டுக் கொண்ட  உயர்நீதிமன்றம் இந்த செயலியை தரவிறக்கம் செய்ய தடை விதித்தது..

அதை ஒட்டி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி நீக்கபப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டின் போது ஆட்சேபகரமான 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் செயலியில் ஆபாச வீடியோக்கள் பதிவிட முடியாதபடி வடிகட்டி பொருத்தப் பட்டதாகவும் தெரிவிக்கபட்டது.

உச்சநீதிமன்றம் இந்த செயலியின் மீதான தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை நேற்று கேட்டுக் கொண்டது. அவ்வாறு நீக்கவில்லை எனில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தடையை நீக்கம் செய்யும் என அறிவித்தது. இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.