சென்னை:

விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் நாமக்கல், சேலம்  உள்பட பல்வேறு  மாவட்டங்களில் விவசாய நிலங்களின் மீது மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 11 விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 11 விவசாயிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.

நாடு முழுவதும் தடையற்ற மின்விநியோகம் நடைபெறும் வகையில், சட்டீஸ்கர் மாநிலம், ராய்கரிலிருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூருக்கு 6 ஆகியரம்  மெகா வாட் மின்சாரம் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 24ஆயிரம் 0 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக  1,843 கிலோ மீட்டர் தூரத்திற்கு5ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி  நடை பெற்று வருகிறது. இந்த மின் கோபுரங்கள்  தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் நாமக்கல், சேலம் மாவட்டங்கள் வழியாக புகளூர் வந்தடைகிறது.

இந்த நிலையில், விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல விவசாயிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி,  விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடையில்லை என்றும், தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவி ட்டது. உண்மையிலேயே மின் கதிர்கள் பாய்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்கள் சம்மந்தப்பட்ட அந்த அந்த மாவட்ட  கலெக்டர்களிடம் கோபுரத்தின் உயரத்தை உயர்த்துமாறு கோரிக்கை மனு அளிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  தமிழகத்தில் வெறும் 345 கிலோ மீட்டருக்கு மட்டுமே மின் கோபுரங்கள் அமைக்கும் நிலையில், மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

உயர்மின் கோபுர திட்டத்திற்கு எதிராக 11 விவசாயிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.