சென்னை

சை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பிர்பல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது கதநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார்.    அவர் நடித்து வெளி வர உள்ள தமிழ்ப்படம் காளி.    இந்த படத்தை மு க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.  வரும் 13ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது எனக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.  வ்ழக்கு மனுவில், “நான் விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாத்துரை’ என்னும் படத்தை வாங்கி வெளியிட்டேன்.  அதில் எனக்கு  பெரும் இழப்பு உண்டானது.   அதனால் அவருடைய அடுத்த படமான காளியை எனக்கு குறைந்த விலைக்கு தர படத்தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமன பாத்திமா ஒப்புக் கொண்டார்.

இதற்காக நான் ரூ. 50 லட்சம் முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துக் கொண்டேன்.    திரையுலக வேலை நிறுத்த போராட்டத்தினால் என்னால் மீதி தொகையை தர இயலவில்லை.    அதனால் விஜய் ஆண்டனி என்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.   எனவே அவர் அண்ணாத்துரை படத்தினால் எனக்கு ஏற்பட்ட இழப்பை கொடுக்கும் வரை காளி படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், “வரும் 13ஆம் தேதி காளி திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.    விஜய் ஆண்டனியும் அவர் மனைவி பாத்திமாவும் ரூ.4.75 கோடியை வரும் 11ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் செலுத்தினால்  இந்த படத்தை வரும் 13ஆம் தேதி வெளியிடலாம்”  என உத்தரவு அளித்துள்ளார்.