சண்டிகர்:

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரியானா மாநில அரசு, 12 வயதுக்கு குறைவானவர்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றவும், பாலியல் அத்துமீறல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் கடுமையான சட்டங்களை  திருத்தம் செய்யவும்  அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் அரியான மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாரின் தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது புதிய சட்டம் இயற்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தின்போது, நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து,  பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கப்படுவதில்லை என்ற நிலையில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை கருத்தில் புதிய சட்டத்தை இயற்ற அரியானா அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றுவது குறித்தும்,  இந்திய குற்றவியல் சட்டம்  376A பிரிவு, 376D போன்ற பிரிவுகளின் சட்டத்தை மீறுவதாகவும், 376D (ஒரு குழுவினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கற்பழிப்பு) ), 354 (பெண்மீது தாக்குதல் அல்லது குற்றச்செயல்), இந்திய குற்றவியல் சட்டத்தின் 354 டி (2) (ஸ்டாக்கிங்) போன்ற பிரிவில் திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐபிசி பிரிவின் 376D A இன் கீழ் இன்னொரு விதிமுறை உருவாக்கப்படுவதாகவும், அதன்படி 12 வயதிற்கு குறைவான  சிறுமியை ஒருவரோ, அல்லது  அதற்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட் டால், அவர்கள்  ஒவ்வொருவரும், அந்த பாலியல்  குற்றத்தை செய்ததாகக் கருதப்படுட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு  மரண தண்டனை அல்லது 20ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அளவிலான கடுமையான சிறைத்தண்டனை வழங்கும் வகையில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.