நியூயார்க்

மெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்தியா உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக விளங்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

உலகெங்கும் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது.  இந்தியா, உகாண்டா போன்ற நாடுகளில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. வரும் 2025க்குள் இந்நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்பு சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்  கொண்டு உலக நாடுகளின் வளர்ச்சி கணக்கிடப்பட்டு வந்தது  தற்போது இந்தியாவை அடிப்படையாக வைத்து கணக்கிடும் அளவுக்கு முன்னேறி வருகிறது.  இந்தியா தனது வியாபாரக் கொள்கையை மாற்றிக் கொண்டது உலக நாடுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

சீனாவில் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவு அந்நாட்டை பின்னுக்குத் தள்ளி உள்ளது.  மளமளவென வளர்ந்து வந்த சீனா அதே வேகத்தில் இப்போது பின்னோக்கி சென்று விட்டது.  அதனால் தற்போது ஆசியாவில் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் அபரிமித வளர்ச்சியை காணுகின்றன.

ஆசியாவில் இந்தியாவும், ஆஃப்ரிக்காவில் உகாண்டாவும் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றன/