ஹரித்துவார்:
ஹரித்துவாரில் நடந்த மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

ஹரித்துவாரில் கடந்த 17ம் தேதிமுதல் 20ம் தேதிவரை யாதி நரசிம்மானந்த் கிரி சார்பில் நடந்த ஜூனா அகாதாவில் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராகச் சிலர் பேசிய பேச்சுகள் பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.
இந்தப் பேச்சுக்கு முன்னாள் ராணுவத் தளபதி, சமூக ஆர்வலர்கள், சர்வதேச டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையிடம் முதலில் கேட்டபோது, யாரும் புகார் அளிக்காததால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே ஆகியோர் அளித்த புகாருக்குப்பின், இந்துத்துவா தலைவர் வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயன் தியாகி மீது மட்டும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் உத்தரகாண்ட் காவல்துறை கைது செய்யவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறுகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் அல்லது யுஏபிஏ அதன் கீழ் குற்றம் செய்த குற்றவாளிகள் மீது பிரயோகிக்கப்பட வேண்டும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஹரித்துவாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel