தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் கௌரவமிக்க உறுப்பினர் அங்கீகாரத்தை மும்பை ஸ்போர்ஸ் கிளப் ஆன ’கர் ஜிம்கானா’ ரத்து செய்துள்ளது.

hardik

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில்(Khar Gymkhana) 3ஆண்டுகளுக்கு கௌரவமிக்க உறுப்பினராக இருந்து வந்தர். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய ஹ்ர்திக் பாண்டியா பெண்கள் குறித்து தவறான கருத்து கூறியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பியது. நெட்டிசன் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கக் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது.

Hardik_Pandya_train_BCCI

பிசிசிஐயின் நோட்டீஸை தொடர்ந்து இருவரும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஹர்திக் மற்றும் ராகுல் விளக்கத்தை ஏற்க முடியாது என கூறிய பிசிசிஐ ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதித்தது. இது ஒருபுறம் இருக்க ஹர்திக் பாண்டியா விளம்பரத்தூதராக செய்துள்ள ஒப்பந்தங்கள் திரும்பப்பெறப்பட்டன.

இந்நிலையில் மும்பையில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மூன்று ஆண்டுகளுக்கு கௌரவ உறுப்பினராக இருந்த ஹர்திக் பாண்டியாவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மேலும், ஹர்திக் பாண்டியாவிற்கு பேரிடியாக உள்ளது.