திருவள்ளூர்: 8 மாதங்களுக்கு பின்ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருவள்ளூர் அரசு கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்கள் கழித்து  பிறகு இன்று திறக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில் முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டும் செய்முறை வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்பதாலும் அவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதுகலைப் படிப்புகளில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூரில் அரசு கல்லூரி இன்று திறக்கப்பட்டது. முதுகலை அறிவியல் ஆய்வக பயிற்சிகளுக்காக பொன்னேரி அரசு கல்லூரிக்கு மாணவர்கள் வருகை தந்துள்ளனர். 8 மாதங்களுக்கு பின் ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனிமனித இடைவெளி, முகக்கவசம், உடல் வெப்பநிலைப் பரிசோதனை, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.