சென்னை:

தமிழில் பேசி கலக்கி வருகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீரர்களின் செயல் தமிழக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

தமிழக பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்து வந்து, டிபிஎல் போட்டி நடக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட டயலாக் பேசி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தமிழ் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
சென்னை, மதுரை, திருநெல்வெலி, என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஹாயாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஹைடன் பல இடங்களிலும் கபாலி டயலாக்கான மகிழ்ச்சி உள்பட சூப்பர் ஸ்டாரின் பல்வேறு டயலாக்குகளை பேசி அசத்தி வருகிறார்.
ஹைடனும் ரஜினி ரசிகராக மாறிவிட்டார் போல…..
Patrikai.com official YouTube Channel