சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் வெகுளித்தனமான நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் ஜெனிலியா.
பிரபல விளம்பரங்களில் நடிகர் அமிதாப்பச்சனுடன் நடித்து வந்த ஜெனிலியா பாலிவுட் துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்பொழுது தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை இன்றளவும் கொண்டுள்ளார்.
பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தனது 33 வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.