அமெரிக்க செஸ் வீரர் ஹென்ஸ் நிய்மென் தன்னுடன் விளையாடிய போட்டியில் ஏமாற்றி வெற்றி பெற்றதாக மேக்னஸ் கார்ல்சன் கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.

கார்ல்சன் இந்த குற்றச்சாட்டு குறித்து செஸ் அமைப்பு ஹென்ஸ் நிய்மெனிடம் விசாரணை நடத்தியது.

19 வயதான ஹென்ஸ் நிய்மென் தான் இதுவரை இரண்டு முறை மட்டுமே தவறான வழியில் வெற்றிபெற்றதாக கூறியதோடு, முதல் முறை விளையாடியபோது தனக்கு 12 வயது இருக்கும் என்றும் இரண்டாவது முறை அவ்வாறு செய்தபோது 16 வயது இருக்கும் என்றும் தெரிவித்தார்.

நிய்மெனின் இந்த பதிலைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட செஸ் அமைப்பு அவர் இதுவரை 100 போட்டிகளில் இதுபோன்று தவறான வழிகளில் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

2020 ம் ஆண்டு வரை பல்வேறு போட்டிகளில் இதுபோன்று வெற்றிபெற்றதை உறுதி செய்த அவர்கள் இதுவரை அவர் பெற்ற பட்டங்கள் மற்றும் பரிசுத்தொகையை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செஸ் போட்டிகளில் ஹென்ஸ் நிய்மென் தவறான வழிகளில் வெற்றிபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது சக வீரர்களையும் செஸ் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.