உலக அழகன் போட்டி: பட்டம் வென்ற இந்தியர்

Must read

சவுத்போர்ட்:
லக அழகன் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில்  பங்கேற்ற   இந்தியர் முதன் முதலாக உலக அழகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்போர்ட் பகுதியில் நேற்று  உலக அழகன் போட்டி நடந்தது. இதில் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இருந்து 47 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட இந்தியாவை சேர்ந்த ரோஹித் முதன் முறையாக  அழகன் பட்டம் வென்றுள்ளார்.
உலக அழகன் பட்டம் பெற்ற ரோஹித்துக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
உலக அழகன் பட்டம் குறித்து ரோஹித் கூறுகையில், இந்த பட்டம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை, பல ஆண்டு கனவு நினைவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது  என்றார்.
 

More articles

1 COMMENT

Latest article