சென்னை: வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை  விடப்படுவதாக என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக   கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்ந்ததால்,  செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் சுழற்றி முறையில் தொடங்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக தொடங்கியதால், பாடங்களை முழுமையான நடத்தி முடிக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வழக்ககமாக பள்ளிகளுக்கு விடப்படும் அரையாண்டு விடுமுறை கேள்விக்குறியானது.

ஆனால், விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இதையொட்டி, நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு  என்று தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.