டில்லி,
இஸ்லாமியர்கள் புனித பயணமாக மெக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
வருடத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்ததாகவும், இந்த பணம் இனிமேல் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, சிறுபான்மையினர் வல்லுநர் குழு பரிந்துரையின் பேரில் ஹஜ் புனித யாத்திரைக்கு அளிக்கப்பட்டு வந்த மானிய தொகையை ரத்து செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.