சென்னை,
ஹஜ் மானிய ரத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்ஜிஆர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவல கத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர் நேரம் ஒதுக்கி தந்த பிறகு எம்ஜிஆர் நுற்றாண்டு விழா சென்னையில் பிரமாண்ட மாக நடைபெறும் என்று கூறினார்.
மேலும், இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும், ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் டிடிவி புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள குறித்து கேட்டதற்கு, தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.