டில்லி:

யங்கரவாத தடுப்புச் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற  மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள  நிலையில், நாட்டில் உள்ள முதல் பயங்கரவாதி யார் என்பது குறித்து, மாநிலங்களவை யில் சட்ட திருத்த மசோதா  நிறைவேறியதும், மத்திய உள்துறை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2008ம் ஆண்டு 164 பேரை பலி கொண்ட மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், முன்னாள் லஷ்கர் இ தாய்பா பயங்கரவாத குழுவின் தலைவரும், தற்போது முடக்கப்பட்டுள்ள ஜமாத்-உத்-தவா தலைவருமா  ஹஃபீஸ் முகமது சயீத் மற்றும் 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்திய  ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான  மசூத் அசார் ஆகியோர் அறிவிக்கப்படலாம் என்றும் டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியஅரசு சமீபத்தில், பயங்கரவாத தடுப்புச் சட்ட திருத்த மசோதாவை  லோக்சபாவில் நிறைவேற்றிய நிலையில், விரைவில் ராஜ்யசபாவிலும்  தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கு நிறைவேற்றப்பட்டதும்,  ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதும், சட்ட திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீது, மசூத் அசார் ஆகிய இருவரும் நாட்டின் முதல் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுவர்.

இந்த சட்டத்திருத்தம்படி,  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுபவர் உள்துறை செயலகத்தில் மேல்முறையீடு செய்தால் செயலர் அதை விசாரித்து 45 நாட்களுக்குள் பதில் அளிப்பார்.

மேலும் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும். பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட வர் ஆய்வுக் கமிட்டியிலும் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து,  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பயணங்கள் தடை செய்யப்படும். மேலும் அவர்களை பற்றிய விபரங்கள் வெளிநாட்டு அரசுகளுக்கு பகிரப்படும் என்று தெரிவிக் கப்பட்டு உள்ளது.