சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக பிரமுகர் எச் ராஜா.
இதற்கு பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அப்ரார் டிஜிபி அலுவலகத்தில் எச் ராஜா மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்றும் ஆனால் அவரது தந்தையை ஜெயப்பிரகாஷ் என குறிப்பிட்டு அவரை கொலை செய்ததாகவும் உண்மைக்குப் புறம்பான தகவலை எச்.ராஜா தெரிவித்துள்ளார் என்றும் எனவே அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், சிவகார்த்திகேயன் தந்தையின் பெயரை தவறுதலாக கூறிவிட்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார் எச்.ராஜா. இதுதொடர்பாக எச்.ராஜா கூறுகையில், “ நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர்.
எச்.ராஜா நீதிமன்றத்தையே அவதுறாக பேசிய நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.