இன்று ராமராஜ்ய ரத யாத்திரையில் எச்.ராஜா கலந்துகொள்கிறார்

விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், நாம் தமிழர், ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.    பலகட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி உள்ளிட்ட சில அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

ஸ்ரீவில்லி புத்தூர் வந்த ரதயாத்திரைக்கு  ஜீயர் வரவேற்பு அளித்தார். பிறகு நேற்று இரவு ரதயாத்திரை மதுரை வந்து சேர்ந்தது. அங்கு புதூரில் உள்ள ராமகிருஸ்ணா மடத்தில் ரதம் நிறுத்தப்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக  தூத்துக்குடி செல்கிறது.யாத்திரையை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா துவக்கி வைக்கிறார்.

சர்ச்சைப் பேச்சுக்களுக்குச் சொந்தக்காரரான எச்.ராஜா, துவக்கி வைப்பதால், பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பேசுவாரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.