பெங்களூரு

முன்னாள் பிரதமர் எச் டி தேவே கவுடா தனது பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவை சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா மீது ச்மீபத்தில் பாலியல் புகார் எழுந்தது.  இதையொட்டி அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  தற்போது ம ஜ த சார்பில் தேர்தலில் போட்டியிடும் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாஜக தலைவர்களுக்கு இந்த புகார் மிகவும் சங்கட்த்தை அளித்துள்ளது.

முன்னாள் பிரதமரும் மஜத கட்சி நிறுவனருமான எச் டி தேவே கவுடா தனது பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா குறித்து எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்காமல் இருந்து வந்தார்.  இந்நிலையில் தன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சிய பிரிஜ்வல் ரேவண்ணா தற்போது தலைமறைவாக உள்ளார்.  ‘

இந்நிலியில் இன்று முன்னாள் பிரதமர் எச் டி வ்ஹேவே கவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில்

“இந்த அறிக்கை மூலம் நான் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.   அவர் எங்கிருந்தாலும் உடண்டியாக திரும்பி வரவேண்டும்.  தன் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்  எனது பொறுமையை மேலும் அவர் சோதிக்க வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்”

ன்று கூறி உள்ளார்.