டெல்லி:

இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஐரோப்பா யூனியன் முன் வந்துள்ளது.
ஹெச் பி1 விசாக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் இந்தியர்கள் அந்நாட்டு பணிக்கு செல்வதிலும், அங்கு ஏற்கனவே பணியாற்றும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அதோடு இந்தியாவுடனான வர்த்தக தொடர்பபையும் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற குழுவின் வெளியுறவு துறை அதிகாரிகள் மட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இந்தியாவுடனான வர்த்த உறவை மேம்படுத்த இரு தரப்பும் நீண்ட நாட்களாக தவறிவிட்டது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த உறவை வர்த்தக ரீதியாவும், முதலீடு ரீதியாகவும் புதுப்பிக்க வேண்டும். இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கதவு திறந்துள்ளது’’ என்று அந்த குழுவில் பிரதிநிதி டேவிட் மெக் ஆலிஸ்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்திய தகவல்தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையானவர்கள். இந்தியர்கள் இல்லாமல் எங்கள் நாட்டு தகவல்தொழில் நுட்ப துறை வெறுவது கடினம். அதனால் அதிக சம்பளம் கொடுக்க தயாராக உள்ளோம். இது தொடர்பான பே ச்சுவார்த்தை நடத்த இந்திய தலைவர்கள் முன் வரவேண்டும். இந்த வர்த்தகம் இரு வழி வர்த்தகமாக இருக்க வேண்டும்’’ என்றார். ஏற்கனவே அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நடந்த உறவுகள் ரீதியிலான சந்திப்பின் போது இந்த வர்த்தக உறவை புதுப்பிப்பது தொடர்பாக எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

முதலீடு தொடர்பான ஒப்பந்த நிபந்தனைகளில் உள்ள சிக்கலான சரத்துக்கள் காரணமாக வர்த்தக உறவு ஐரோப்பா யூனியன் – இந்தியா இடையே நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் முதலீ டுகளை இருநாடுகளும் மேற்கொள்ளும் என்ற பேச்சு எழ தொடங்கியுள்ளது. சமீபத்தில் கனடாவுடன் ஐரோப்பா யூனியன் வர்த்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.