சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இதனை நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இதில் நாயகியாக காயத்ரி நடித்து வருகிறார். மேலும், செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள்.

பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

[youtube-feed feed=1]