‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதைகள் எழுதி வந்தார் சீனு ராமசாமி.
இந்த கதை ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்து போனதால் அதில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.
தற்போது ஆரம்பகட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர், இப்படத்தில் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியராக நடிக்கவுள்ளார்.
இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்ஷன் த்ரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.