
ஜி.வி.பிரகாஷ் ‘ட்ராப் சிட்டி’படத்தின் மூலம் ஹாலிவுட்டில் எண்ட்ரியாகிறார் . ஒரு போதைப் பொருள் விற்பனையாளர் எப்படி வெற்றிகரமான ராப் பாடகராக மாறுகிறார் என்பதே இந்த படத்தின் கரு.
இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டாண்டப் காமெடி நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், டென்னிஸ் எல்.ஏ ஒய்ட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரிக்கி பர்ச்செல் இயக்கும் இந்தப் படத்தை டெல் கணேசன் இணை தயாரிப்பு செய்கிறார். இவர் சமீபத்தில் ‘தி டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஆகியவற்றை தயாரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel