சென்னை: இன்று (20ந்தேதி) முதல் 29ந்தேதி வரை குருவாயூர்-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில். நெல்லை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை அருகே திருமங்கலம்-துலுக்கப்பட்டி இடையே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில்கள் பகுதியாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி,
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வண்டி எண்: 06063) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதியும்,
நாகர்கோவில்-எழும்பூர் (06064) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதியும்,
தாம்பரம்-நாகர்கோவில் (06065) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28, 29-ந்தேதிகளிலும்,
நாகர்கோவில்-தாம்பரம் (06066) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 29, 30-ந்தேதிகளிலும் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
பகுதி ரத்து விவரம்
அதேபோல், குருவாயூர்-எழும்பூர் (06128) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று முதல் 29-ந்தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை எழும்பூர்-நெல்லை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
எழும்பூர்-நெல்லை (02631) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மதுரை-நெல்லை இடையிலும், நெல்லை-எழும்பூர் (02632) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நெல்லை-மதுரையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
எழும்பூர்-செங்கோட்டை (06181) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மானாமதுரை-செங்கோட்டை இடையிலும், செங்கோட்டை-எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை செங்கோட்டை-மானாமதுரை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பயணிகள் ரயில்வே ஹெல்ப் லைன் எண் 139 தொடர்புகொள்ளுங்கள்.