குருவாயூர்
கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் குருவாயூரில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 264 திருமணங்கள்
நடைபெற்றுள்ளது.
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபல குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இக்கோவிலில் திருமணம் நடத்துவது கேரள மக்களின் ஐதிகம். இதன்படி ஒரே நாளில் 264 திருமணங்கள் நடத்தி முடித்திருப்பது சாதனை யாகும்.
மலையாள நாட்காட்டியின்படி கேரள மக்களின் புனித மாதமான சிங்கம் மாதத்தில் அங்கு அதிக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் குருவாயூர் கோவிலில் மூன்று மண்டபங்களே உள்ளன. குறிக்கப்பட்ட நல்ல நேரத்துக்குள் அத்தனை திருமணங்களும் அந்த மூன்று மண்டபஙளுக்குள்தான் நடத்தி முடிந்தாக வேண்டும். எனவே ஜெட் வேகத்தில் திருமணங்களை நடத்தி முடிக்க கோவில் நிர்வாகம் முறைகளை வகுத்து அவற்றை சிறப்பாக நடத்திக்கொண்டும் வருகிறது.
இரண்டே நிமிடங்களில் நடந்து முடியும் தாலிகட்டு உள்ளிட்ட வெகு குறைவான நேரத்தில் செய்யப்படும் சில புனித சடங்குகளுடன் திருமணம் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிடும். அப்புறம் என்ன, உடனே ஜருகண்டி ஜருகண்டிதான்…காரணம் அடுத்த திருமண ஜோடி அநத இடத்துக்காக தயாராக காத்திருக்கும். நீங்கள் ஒரு மாகி ரெடிமெட் நூடுல்ஸ் செய்து முடிப்பதற்குக்ள் குருவாயூர் கோவிலில் ஒரு திருமணம் முடிந்துவிடும்.
இப்படிப்பட்ட கூட்ட நெரிசல் குழப்பத்தில் வேறு ஒரு மணமகள் கழுத்தில் அவசரமாக தாலிகட்டிவிட்டு அதனால் ஏற்படும் அவஸ்தைகளை மையமாக வைத்து 1992-ல் “கிரகப்பிரவேசம்” என்றொரு மலையாளத் திரைப்படம் வெளிவந்தது. குறிப்பிடத்தக்கது.
கோவிலில் சிம்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்ப்பை பெரிய மண்டபங்களில் நடத்தி பிரம்மாண்டப்படுத்துவது அங்குள்ள பணக்காரர்களின் வழக்கம்.
கேரள மக்கள் திருமணங்களை தவிர்க்கும் மிதுனம், கடகம் மற்றும் கன்னி மாதங்கள் உட்பட ராகுகாலம், எமகண்டங்களிலும்கூட இக்கோவிலில் திருமணங்கள் நடப்பது வழக்கம். காரணம் குருவாயூரப்பன் சன்னிதியில் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறிவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
இங்கு பல திருமணங்கள் நடக்க “திருமணத்தை உன் சந்திதியிலேயே நடத்தி வைக்கிறேன்” என்று பெற்றோர்கள் குருவயூரப்பனிடம் வைக்கும் பொருத்தனைதான் காரணமாம்.