ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

 

 

மேஷம் ராசி,

அஸ்வினி நட்சத்திரம்

பிரமாதமான பலன்கள் உண்டுங்க.  வயிறு சம்பந்தமான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைச்சுடுவாரு குரு பகவான். அப்பாவுக்கு இருந்து வந்த குழப்பங்களும் கவலைகளும் தீரும். அவர் உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு.  வெளிநாடு போவார். ‘நமக்கு ராசியே இல்லை.. அதிருஷ்டமே கண்ணில் தெரியாத தொலைவில் காணாமல் போயிடுச்சு..’ என்றெல்லாம் புலம்பிக்கிட்டிருந்தீங்களே.. இனி அப்படியெல்லாம் இல்லைங்க. அதிருஷ்டம் உங்க அட்ரஸ் தேடி வரும். ஆமை வேகத்தில் போயிக்கிட்டிருந்த முன்னேற்றமெல்லாம் ராக்கெட் ஸ்பீடில் பறக்குமே இனி.  புது ஐடியாக்களுடன் வாழ்க்கையை அணுகுவீங்க. வாழ்க்கையில் முன்னேறுவீங்க. தொட்ட காரியங்கள் துலங்கும்.

பரணி நட்சத்திரம்

புது முயற்சிகள் வெற்றியாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தந்தையால் நன்மைகளும் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். எனினும் அவருடன் நல்ல வகையில் அனுசரித்துப போக வேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். தந்தை வழி சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அதிக கவனம் தேவை.  நண்பர்கள், உறவினர்களுடன் பயணங்கள் செல்வீர்கள் பண விவகாரங்கள் மெதுவாக  இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. உங்க பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். ஏங்கிக் காத்திருந்தவங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார்.

கிருத்திகை நட்சத்திரம்  (1-ம் பாதம்)

மகளின்  அல்லது மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உறவினரும் நண்பர்களும் மூக்கின் மேல் வைச்ச கையை எடுக்க வெகுநாட்களாகும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்புக்காக எவ்ளோ காலம் காத்திருந்தீங்க. அது வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்க ஆரம்பிச்சுடுவீங்க. பல காலத்துக்குக் கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் ஒரு வழியாக நிறைவேறும். ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். என்ஜாய். சுப செலவுகள் உண்டு. தந்தைக்கு இருந்து வந்த ஆரோக்கிய மற்றும் நிதிப் பிரச்சினைகள் தீரும். உத்யோகத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் உண்டு.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=7rB-WzfY8KI&feature=youtu.be

 

 நாளை…. ரிஷபம் ராசிக்குரிய பலன்கள்