ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

       

மீனம் ராசி:

பூரட்டாதி நட்சத்திரம் பாதம் 4 உள்ள அன்பர்களுக்கு,

மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம். எஸ்பெஷலி ஆஃபீஸ்ல கேர்ஃபுல்லா இருங்க. ப்ளீஸ். குடும்பத்தில் ஹாப்பி இனி ஹாப்பி. விடாமுயற்சியால் வெற்றிவாய்ப்புகள் அதிகரிக்கும். பேச்சினால் லாபம் கூடும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். அலுவலக விஷயங்களில்  இருந்து வந்த மனப் போராட்டங்கள் விலகி, உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கி, அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மகளின்  அல்லது மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீங்க.

மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ள அன்பர்களுக்கு,

உடல் ஆரோக்கியத்தில் முன்பிருந்த பிரச்சினைகள் குறையும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லதுங்க. நொடி நேரம் நீடிக்கப்போகும் கோபம்தான். ஆனால் அதன் விளைவைப்பற்றி யோசிச்சுப் பாருங்களேன். செல்வாக்கு அதிகமாகுங்க. வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்ள வைக்கும்படியான சம்பவங்கள் நடக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அயல்நாட்டுக்கோ அல்லது  வேற்று மொழி பேசும் மாநிலத்திற்கோ செல்லும் வாய்ப்புக் கிடைக்குங்க. இத்தனை காலம் இழுத்துப் பறிச்சுக்கிட்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குறிப்பாய் அது  தந்தை வழி சொத்து பற்றியதுன்னா சந்தேகமின்றி உங்கள் தரப்புக்குத்தான் வெற்றி.

மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் உள்ள அன்பர்களுக்கு,

உங்க மனைவி அல்லது புருஷனின் வருமானம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். மேடைமீது வெளுத்து வாங்குவீங்க. கைதட்டல் ஏகமாய்க் கிடைக்கப் போகுது. குழந்தைங்க உங்களை சந்தோஷப்படுத்துவாங்க. சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சற்று அலைந்து திரிந்தே முடிக்கவேண்டி வரும். அதற்கு மனசளவில் தயாராயிடுங்க.  ஜாலியா அதை எதிர்கொள்வீங்க. எழுத்து மற்றும் சினிமாத்துறையில் உள்ளவங்களுக்குச் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் மற்றும் பிரபலமானவங்க நட்பால் சில விஷயங்களை ஷ்யூராய் சாதித்துக் காட்டுவீங்க. குழந்தைங்களின் அலட்சியப் போக்கு மாறும். முழுப்பாசம் கிடைக்கக் கொஞ்சம் காத்திருங்களேன்?

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

அன்பர்கள் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ குருபகவான் அருளுடன் பத்திரிகை.காம் இணையதளமும் வாழ்த்துகிறது…